Tuesday, March 28, 2017

"நெஞ்சமே கொஞ்சம் "

சதியில் வெல்வார் விதியை 
சரித்திரத்திலும் தூற்றல்கள்
சாக்கடைகள் கூட கடவுளாகும் 
சத்திய உண்மைகள் மூடி 
வித்துவனை குத்திடுவார்
கேவல முத்திரையிட்டு 
முழுப் பூசணியை
மூடுவார் பேனாவில் 
வெற்றிநாள் கொண்டாட்டம் 
வேர்விடும் விழாவாய் மாறும்
தோற்றவனின் உண்மைமுகம் 
தோன்றாது ஏடுகளில்

வென்றவனின் கற்பனைகள்
விளையாடும் கண்டபடி
அரக்கன் பட்டம்
அசுரன் பட்டம்
அப்படியே தொடர்ந்து
வேர்கொண்ட புனிதருக்கும்
தீவிரவாதி மகுடம் இன்று
பார் விஞ்சும் மொழிக்காவலனுக்கு
பயங்கரவாதிப் பாராட்டு மொழி


கண்கெட்டு கதைக்கும்
பண் ஏதுமறியாமலே
பாட்டிசைக்கும் பரவச
பாழ்பட்ட கலி உலகு
உறவுகளே கவனம்
காலப்போக்கில் எங்கள்
உரிமைக் கூடெரிந்த
மே மாதத்தைக் கூட மருவி
திருநாள் ஆக்குவார் கயவர் .
தோற்றவனின் உண்மைமுகம் 
கண்டதையும் நம்பி 

" வன்னியூர் செந்தூரன்"---

No comments:

Post a Comment