Monday, March 27, 2017

"விடுதலை வீரர்கள் மடிவதில்லை"

உலக அநீதிகளுக்கு
ஒற்றைப் புள்ளியிட்ட
ஓர்மத் தீ ...

விடுதலை விடிவெள்ளி
கருமலைகள் கடந்தவன்
எரிமலையை வென்றவன்
துளியேனும் அஞ்சாதவன்
பழிபாவம் கொள்ளாதவன்
எழுத்தினால் புதுச்சரிதம்
இயம்பிவிட்டு போனவன்
.
ரவைகளால் அநீதியின்
அடியழித்து வாழ்பவன் .
சக்கரைக் கிண்ணத்தில்
இனிப்பை தூவிவிட்டவன் .
எக்கரை வாழும் போராளி
இதயத்திலும் இடமானவன் .

மருத்துவ மகான்
எழுத்தின் ஆயுதம்
புரட்சிப் பூகம்பம்
எளிமையின் எழுதா ஏடு ..

தலைவர்கள் பிறப்பதில்லை
தரணி உருவாக்குகிறது .
வீரர்கள் வீழ்ந்தாலும்
வரலாறாய் வாழ்வார்கள்
எத்தனை தேவர்கள்
வந்துதித்தார் எம்மண்ணில்
மறந்தாலும் மறையவில்லை
அவர் புகழும் இவன் போல ...

பொன்னிலம் காத்துநின்ற
தன்னலமில்லா அண்ணனின்
தரமான வீர விழுதுகளே
திண்ணமான உம் எண்ணம்
திடமான வரலாறு இங்கு



No comments:

Post a Comment