Tuesday, March 28, 2017

இது கருணா அம்மானிற்கு மட்டுமல்ல

தற்போது கருணா அம்மானின் கைது ஒரு பாரிய செய்தியைச்சொல்கிறது. யானைகள் வீட்டையும் மிதிக்கும் காலம் விரைவில்.. இதே ஊடகங்களில் சுமந்திரத்தாரும் சம்மந்தரும் வருவினம் விலங்கோடு..வீரர்களை எதிரிகளுக்கும் பிடிக்குமென்பது நிலையான உண்மை.
உண்மையை சொல்ல வேண்டுமானால் பல்கலைகழகத்தில் என்னுடன் பயின்ற பல சிங்கள மாணவர்கள் புரட்சிகர சிந்தனையுடையவர்கள். பெரும்பாலான தலைமைத்துவ சிந்தனையுடைய சிங்கள மாணவர்கள் ஜே.வி.பி யின் ஆதரவாளர்கள்.அவர்களுக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை மிகவும் பிடிக்கும். எங்கள் இனத்தில் தான் துரோகிகளும் , தலைவரின் அபார வளர்ச்சியை பொறுக்க முடியாத புல்லுருவிகளும் இருந்தனர் /இருக்கின்றனர். ஆனால் தமிழரின் போராட்டத்தை நியாயம் எனக்கருதும் சிங்கள மக்களின் ஒருசாராரும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒன்று மட்டும் உண்மை.. நிலத்திலோ புலத்திலோ தமிழன் எல்லோரும் ஒற்றுமையாய் இருந்தது போல அமைந்தது என்றால் அது தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆட்சியில் தான். இதற்கு இரு காரணங்கள் இருக்கிறது.
பயம், பக்தி, ஒருவர்க்கத்தினருக்கு அவரின் செயற்பாட்டில் பக்தி, மற்ற சாராருக்கு பயம் .நேரடியாக சொல்வதாயின் பிரபாகரன் என்ற மனிதரின் இறுக்கமான தண்டனைகள் மீது பயம். அதனால் தான் தமிழனை கட்டுப்படுத்தவும் முடிந்தது.
விடுதலைப்புலிகள் ஒழுக்கமான அமைப்பு எனப் பெயரெடுத்ததற்கும் அவர்மீதிருந்த போராளிகள் பயம் தான் காரணம் .பின்பு அதுவே பழக்கமாகிப்போனது என்பது தான் உண்மை.
கருணாவின் பிரிவிலும் இந்த பயம் செல்வாக்கு செலுத்தியிருந்தது. தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ தண்டனையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையோ அன்று அவருக்கு இருக்கவில்லை. அந்த அவரின் மனநிலை தான் ஆசை,பழிவாங்கல் , துரோகம் என மாறி பணத்தில் மிதந்து தமிழீழ கனவையும் அழித்தது மட்டுமல்லாது அவரின் போரியல் வீரத்தையும் கரைத்து இன்று துரோக முத்திரையுடன் அவமானப்பட்டு நிற்கிறது.
இன்று சிறைக்குச்செல்லும் போது சோகத்தை மறைத்து அவர் சிரிப்பது வேதனைக்குரியதான நிகழ்வு அவரைப்பொறுத்தவரை. ஆனால் அன்று இதே மனநிலையில் இவர் தலைவரிடம் சென்றிருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும். இவரின் நிலையும் புகழும் வேறாக இருந்திருக்கும். வரலாறு தடம்மாறிப்போயிராது.. நிலத்திலும் புலத்திலுமுள்ள ஒருசிலரின் சுயநல வியாபாரங்கள் மூலைக்குள் படுத்திருந்திருக்கும். இன்றைய தமிழர் பிரதிநிதிகள் என்று தமக்குதாமே கூறும் வெள்ளைவேட்டிக் கள்வர்கள் பாராளுமன்றிலென்ற சர்வதேச அரங்கிலேயே உரக்கச் சொல்லியிருப்பார் தமிழீழம் தான் எங்கள் நாடு என்று.காரணம் இவர்களுக்கும் பின்புலத்தில் காவலன் தலைவனாட்சி இருக்கிறதே என்ற பயமும் பக்தியும் தானாக வந்திருக்கும்.
– வன்னியூர் செந்தூரன்–
ஒன்று மட்டும் உண்மை.. நிலத்திலோ புலத்திலோ தமிழன் எல்லோரும் ஒற்றுமையாய் இருந்தது போல அமைந்தது என்றால் அது தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆட்சியில் தான். இதற்கு இரு காரணங்கள் இருக்கிறது. பயம், பக்தி, ஒருவர்க்கத்தினருக்கு அவரின் செயற்பாட்டில் பக்தி, மற்ற சாராருக்கு பயம் .நேரடியாக சொல்வதாயின் பிரபாகரன் என்ற மனிதரின் இறுக்கமான தண்டனைகள் மீது பயம். அதனால் தான் தமிழனை கட்டுப்படுத்தவும் முடிந்தது.விடுதலைப்புலிகள் ஒழுக்கமான அமைப்பு எனப் பெயரெடுத்ததற்கும் அவர்மீதிருந்த போராளிகள் பயம் தான் காரணம் .பின்பு அதுவே பழக்கமாகிப்போனது என்பது தான் உண்மை.கருணாவின் பிரிவிலும் இந்த பயம் செல்வாக்கு செலுத்தியிருந்தது. தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ தண்டனையை ஏற்றுக்கொள்ளும் மனநிலையோ அன்று அவருக்கு இருக்கவில்லை. அந்த அவரின் மனநிலை தான் ஆசை,பழிவாங்கல் , துரோகம் என மாறி பணத்தில் மிதந்து தமிழீழ கனவையும் அழித்தது மட்டுமல்லாது அவரின் போரியல் வீரத்தையும் கரைத்து இன்று துரோக முத்திரையுடன் அவமானப்பட்டு நிற்கிறது.இன்று சிறைக்குச்செல்லும் போது சோகத்தை மறைத்து அவர் சிரிப்பது வேதனைக்குரியதான நிகழ்வு அவரைப்பொறுத்தவரை. ஆனால் அன்று இதே மனநிலையில் இவர் தலைவரிடம் சென்றிருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்கும். இவரின் நிலையும் புகழும் வேறாக இருந்திருக்கும். வரலாறு தடம்மாறிப்போயிராது.. நிலத்திலும் புலத்திலுமுள்ள ஒருசிலரின் சுயநல வியாபாரங்கள் மூலைக்குள் படுத்திருந்திருக்கும். இன்றைய தமிழர் பிரதிநிதிகள் என்று தமக்குதாமே கூறும் வெள்ளைவேட்டிக் கள்வர்கள் பாராளுமன்றிலென்ற சர்வதேச அரங்கிலேயே உரக்கச் சொல்லியிருப்பார் தமிழீழம் தான் எங்கள் நாடு என்று.காரணம் இவர்களுக்கும் பின்புலத்தில் காவலன் தலைவனாட்சி இருக்கிறதே என்ற பயமும் பக்தியும் தானாக வந்திருக்கும்.– வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment