எனது கூரிய விதிப்பென்சில்
விசித்திரக் கிறுக்கல்களை
மனப்பாறையில் எழுதமுயன்று
மர்மமாய் உடைந்தே போகிறது
சதிநேரமோ சூட்சுமமாய் இறுக்கப்பட்டு
சபலமான முட்களை சிறையிட்டிருக்கிறது...
விழுததுவோ என்னை விழுந்துவிடும்படி பணிக்கிறது..
மண்ணரணோ தன் இயலாமையை இயம்பியழுகிறது..
உயிர்களின் நிலைத்திருப்பு அன்பென்பதை
உணர்வற்ற பணக்கட்டு போதித்துச் செல்கிறது..
காமத்தை தவறென்றால் கல்யாணம் முறையல்ல
காதலோடிணைப்பதே காமத்தின் சுரப்பு தான்
பித்தம் படித்த கால்களுக்கு கத்தத்தெரியாது
பத்துமறிந்த பரதேசிக்கு வாழ்வில் இனிப்பிராது
கத்தும் காட்டாறு சுடலை தாண்டியும் கடலை நாடும்
மத்து புணர்ந்தாலே பாலும் மருவி வெண்ணையாகும்
மொழியின் பெருமையுணர்ந்தவனுக்கே
வலியின் வலிமையுணர்ந்தும் சிலர் மொழிகள்
பலியில் போகும் ஆட்டிற்கிருக்கும் சிறு அமைதிகூட
மலரில் உறங்க எண்ணும் பலருக்கு இருப்பதில்லை...
மனமே நீ பெரும் சமுத்திரம் தான் உணர்கிறேன்
எத்தனை விசித்திரங்களை தாண்டிச் செல்கிறாய்
சுமைகளை நீக்கி உன்னை மீள் செப்பனிட்டுக் கொள்
மறக்காமல் ஆவணமாக்கிவை
இனிய நினைவுகளை மட்டும்....
~வன்னியூர் செந்தூரன்~

No comments:
Post a Comment