Tuesday, March 28, 2017

இது பொதுவானதே

நீ இழந்தவற்றை நினைக்கையில்
தொலைதூரம் சென்றிருப்பாய்
விழிபார்க்கும் கடைசிச்சாலையில்
விரகம் மட்டும் தனித்திருக்கக்காண்பாய்
வாழ்க்கையின் முடிவுப்புள்ளியை
முடிச்சிட்டுப்போதிக்கும் தத்துவம்
உருவறியா மனச்சிறையில் உனை
இரும்புச்சங்கிலிகள் சிறையிட்டிருக்கும்
போலிமுகத்தெருநாடகங்கள் முடிந்திருக்கும்
சித்தத்தை சுத்தமாக்கும்
ஆண்டவன் சிந்தனை

–வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment