Tuesday, March 28, 2017

முல்லைத்தீவு என் நிலம். நான் பூர்வீக வன்னியன்

எனது பார்வையில்
வன்னிமாதா வளமானவள்
அடங்காப்பற்று என்றும்
மடங்கிப்போகாது யாருக்கும்
திமிர் கொண்டவன் என திட்டலாம்
திடமான மனது மண்ணின் பரிசது
வீரமென்பது சண்டியனென்று பொருளல்ல
நெஞ்சுரத்திலூறிய நெருப்பது
வந்திங்கு குடியேறிய வம்சமல்ல நாம்
வந்தாரை வரவேற்று வாழவைத்தவர்கள்
மலைகள் காடுகள் ஆறுகள் குளங்கள்
அடையாளப்பத்திரங்கள் எமக்கு
சிங்களவனுக்கு பந்தம் தூக்கிய
பரதேசிப்பிறப்பல்ல நாங்கள்
சித்துவிளையாட்டில் குலத்தை
சிதைத்து சூறையாடிய சிற்றர்களுமல்ல
உயிர் விலை கொடுத்திருக்கிறோம்
தியாகத்தை தின்று வளர்ந்திருக்கிறோம்
வன்னியை வைத்து அரசியல் செய்யாதீர்
அனுதாபத்தை தூவி அடிமையாக்காதீர்

-வன்னியூர் செந்தூரன்-


No comments:

Post a Comment