Monday, March 27, 2017

காலம் கடந்த படமானாலும் கருத்தில் மாறாதது

துருப்பிடித்த நினைவுகள் கூட
தோற்றுப்போகாது காலத்திடம்
கருக்கொண்ட சிந்தைகளில்
காரீயம் பூசியபடி வதைதரக் காத்திருக்கும்
வல்லமை தந்த வலியகரம்
சொல்லிய மொழி தவறியிருக்கலாம்
அல்லியின் இலைத்தண்டு ஒன்று
அலை திறந்து எண்ணைக்கிணற்றுள் தவிக்கலாம்
வில்லிலெழுந்த அம்பின்திசை
எய்தவன் நெஞ்சையே குறிவைக்கலாம்
கள்ளிக்காட்டிலும் கரும்புச்செடி
காவலின்றி வளரலாம் இது மரபே
சூரியனின் வெப்பத்திற்கு அஞ்சிய தென்றல்
எரிமலைக்குள் இன்பமுற்றுத் திணறலாம்
பனித்துளியை கூட ஆதாரம் காட்டி
புல்லைக் குற்றவாளிக் கூட்டிலேற்றலாம்
எது எவ்வாறான போதிலும்
மரணத்தை நோக்கி பதிவெடுத்தபடி
காலம் தன் கடமையைச் செய்கிறதே
கலிகாலம் நலிய திடவாழ்வு தானே

– வன்னியூர் செந்தூரன்–



No comments:

Post a Comment