Tuesday, March 28, 2017

தமிழே எங்கள் உயிர்

யாழில் வாள்கள் இன்னும் விழிக்கட்டும்
பேடிநாய்களின் குருதிநாரைக் கிழிக்கட்டும்
நக்கித்திரியும் காக்கிக்குறைகள் கதறட்டும்
முக்கிச்சட்டம் பேசும் முடவர் முழிக்கட்டும்
படிப்பெதற்கு பாடையிலேறவா
அடித்து நொருக்கு அரசு அழியட்டும்.
எம்மை நாமே ஆழவேண்டிய காலம்
ஏமாற்றம் கண்டது எம்மாலும் தான்
அரசியல் பேடிகளை அரங்கிலொதுக்கு
விரிவுரை தேவையல்ல முடிவுரை கேள்.
சம்மந்தமான சவப்பெட்டியை நாமே தான்
விரைவுபட வரையவேண்டும் அதுவே நல்லது
நீதிபதிப் பெருமக்களுக்கு தெரியாதப்பா ஒன்றும்.
மணல் ஏற்றியவன், மரம் வெட்டியவன்,
கசிப்பு விற்றவன், கடையில் மிட்டாய் விற்றவன்
எல்லோருக்கும் பணப்பறிப்பு தீர்பெழுதவேண்டுமப்பா
பறிபோன உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை
சிலநாள் போராட்டத்தில் மாற்றம்வரப்போவதில்லை
ஈழத்தமிழ் மாணவப்பெருமக்களுக்கோர் கோரிக்கை
மூடுங்கள் பீடங்களை முடிவுவந்தால் பிறகு கல்வி

– வன்னியூர் செந்தூரன்–

No comments:

Post a Comment