Tuesday, March 28, 2017

தூறலுடன் தேடலாகும் குளிர்மனமே

உன்னைவிட என்னையாரும்
உணர்ந்திருந்திருக்க முடியாது
உன்னைவிட என்மனதை யாராலும்
கோபமாக்கி விடுதல் எளிதல்ல
இலக்கியமுரைக்காத இயப்பியலை
என் நாமத்தில் உரைப்பது நீயாகத்தானிருக்கும்
கவிதைக்கிறுக்கனுக்கே கருத்துமறந்துபோகும்
கானகத்து வெள்ளந்தியழகு இவ்விருட்டுக்கு
உனக்கசைவில்லாதிருந்தால் நீயுமிருந்திருப்பாய்
பொம்மைகளின் கண்ணாடி அறைமீதில்
உன்னை கண்டு பூக்கள் சொரிவதில்லை கலங்காதே
பூக்களுக்கு போட்டியிட தயக்கமாயிருக்கலாம்

–வன்னியூர் செந்தூரன்–


No comments:

Post a Comment