-பண்பாட்டுப்பவனியில் வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனை நினைவுகூரும் முகமாக குதிரையில் பவனியாக பண்டாரவன்னியனும், முத்துப்பல்லாக்கில் குருவிச்சி நாச்சியாரும் அழைத்து வரப்பட கும்மி, குடமுழுக்கு,கோலாட்டம், காவடி ,பஜனை அணி, பொம்பலாட்டம், குதிரையாட்டம்,என்பவற்றோடு பண்பாட்டு மரபுகளை சித்தரிக்கும் பதினைந்து ஊர்திகளும் பவனியாக நகர்ந்து பிரதேச செயலகத்தை அடைந்தது.
-பவனி ஊர்வலத்தின் நேரடி நிகழ்வு அறிவிப்பினை வன்னியூர் செந்தூரன், முல்லைத்தீபன் இருவரும் வழங்கினர்.
-அரங்க நிகழ்வுகள் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.அனுருத்தன் தலைமையில் நடைபெற்றது.
-பிரதம விருந்தினராக முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்துசிறப்பிக்க , கௌரவ அதிதிகளாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
-விசேட அரங்கநிகழ்வுகளாக கவியரங்கம், பட்டிமண்டபம், வில்லுப்பாட்டு, அரிச்சந்திரமயானகாண்டம், காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, இன்னிசைச் சங்கமம் போன்ற நிகழ்வுகளுடன் ஏனைய நிகழ்வுகளும் இனிதே நடைபெற்றது.
-முத்தெழில் வருடாந்த சஞ்சிகை வெளியீட்டுரையை பிரதேசத்தின் மூத்த கல்விமான் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி திரு ச. தில்லையம்பலம் அவர்கள் நிகழ்த்தினார்.அத்துடன் மூத்த கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு“ பண்டாரவன்னியன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
-ஒட்டுசுட்டான் கலாசாரப்பெருவிழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு அதிகாலை 2.00 மணியளவில் நிறைவுற்றது.
“ வன்னியூர் செந்தூரன்”-பவனி ஊர்வலத்தின் நேரடி நிகழ்வு அறிவிப்பினை வன்னியூர் செந்தூரன், முல்லைத்தீபன் இருவரும் வழங்கினர்.-அரங்க நிகழ்வுகள் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.அனுருத்தன் தலைமையில் நடைபெற்றது.-பிரதம விருந்தினராக முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கலந்துசிறப்பிக்க , கௌரவ அதிதிகளாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.-விசேட அரங்கநிகழ்வுகளாக கவியரங்கம், பட்டிமண்டபம், வில்லுப்பாட்டு, அரிச்சந்திரமயானகாண்டம், காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, இன்னிசைச் சங்கமம் போன்ற நிகழ்வுகளுடன் ஏனைய நிகழ்வுகளும் இனிதே நடைபெற்றது.-முத்தெழில் வருடாந்த சஞ்சிகை வெளியீட்டுரையை பிரதேசத்தின் மூத்த கல்விமான் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி திரு ச. தில்லையம்பலம் அவர்கள் நிகழ்த்தினார்.அத்துடன் மூத்த கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு“ பண்டாரவன்னியன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.-ஒட்டுசுட்டான் கலாசாரப்பெருவிழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டு அதிகாலை 2.00 மணியளவில் நிறைவுற்றது.“ வன்னியூர் செந்தூரன்”

No comments:
Post a Comment