என் மனமெனும்
பிரபஞ்சப் பரப்பில்
பறக்கும் பட்டம்
ஆடியதுண்டு..
அசைந்ததுண்டு ..
ஆகாயம் வரை
அண்மித்ததுமுண்டு..
அப்பப்போ அயலாரின்
அம்புகளுக்கு
தப்பியதுமுண்டு..
ஆனால் எப்போதும்
ஒரு சிறப்பு உண்டு
எந்தன் பட்டத்திற்கு..
வாலற்ற வல்லமையுரு
ஏனென்றால் ..
உயருவதற்க்காக வால்பிடித்தோ
வாலை நம்பியோ அது இருந்ததில்லை..
முச்சை பலமாக முடிஞ்சிருக்கு
முச்சை ஓர் நாள் அறுபடும் - பட்டத்தின்
மூச்சும் அன்று அமைதிபெறும்
வால் இருந்தால் வாழ்ந்திருப்பேன் என
வருந்தாது ஒருநாளும் .----
----- வன்னியூர் செந்தூரன் ------
No comments:
Post a Comment