Monday, March 27, 2017

நீ காத்திருக்காதது ஏன்..?

மரணத்தைத் நாடியோடும்
திடமற்ற வாழ்க்கையாற்றில்
எங்கோவுதிர்ந்த நீயென்னுள்
ஏற்றமுற்றது சுழிப்புமுனையிலல்லவா
நீ வரைந்தவை நீரோவியங்களா –இல்லை
நீரின் அசைவால் கீறிய தடுமாற்றமா ?
இயல்புநிலை எதுவென்று இயம்பியிருந்தால்
கிளை முறிந்த கொப்பது ஒதுங்க எண்ணியிராது.
நீ உதிர்ந்து விழுந்த இலையா ?
கசக்கி எறியப்பட்ட கந்தலா ?
தவறி நீரில் விழுந்த தருமொழியா ?
அடியேன் ஏதும் அறியேன் உன்னைப்பற்றி
இருந்தும் ஏன் இத்தனை கரிசனை
இடித்து நொருக்கிக் கேட்டேன் இதயத்தை
ஈரமாகத்தான் இருக்கிறேன் என்ற பதில் மட்டும்
மார்படித்து உரைத்துவிடு மனம்கேட்கும் மருந்ததை
மீண்டுவருவாயென வேரில் செருகியபடி
தாண்டிப்போகும் இலைகளை சோதனையிட்டேன்
சீண்டிச்செல்லும் ஏமாற்றமே எனதாகி விட்டதின்று
என்வரியின் கனம் புரியாதவரும் தாண்டிச்செல்க....
இது எனக்கு இயல்பே

– வன்னியூர் செந்தூரன்–



No comments:

Post a Comment