உன்னைப் பார்க்க இன்று
உனக்கே அருவருப்பாயிருக்கலாம்
உன்தேகம் அம்சவழகாயிருக்கலாம்
அன்றைய படத்தைக்கூட அவமானமாயுணரலாம்
வர்ணப்பூச்சுக்கள் உன்வதனத்தை
வாடகைக் கொள்வனவிட்டிருக்கலாம்
விழிமடலில் ஓவியமிட தூரிகைகள் காத்திருக்கலாம்
உதடுகள் செம்முத்தமிட்டே கண்திறக்கலாம்
கேசங்கள் வெப்பத்தால் பதனிட்டு
கருநீர் வீழ்ச்சியாய் வழிந்தோடலாம்
நறுமணப் பூச்சுகள் உன்னில் கமகமக்கலாம்
நறுமுகையே நீ நாகரீக நங்கை தான்
மருதாணி விரலில் இரசாயனம் மின்னலாம்
இடுப்பழகு காக்க போசனம் தவிர்த்திருக்கலாம்
உன் நடை முதல் உடை என்ன எடை கூட
இயல்பு மாற்றம் கண்டு இனிப்பாயிருக்கலாம்
ஓ கண்ணே ஒன்றைப் புரிவாயா அழகே
எண்ணை படிந்த முகத்தின் நயம்
எந்த நவீன முகக்களியிலும் வராதடி
தேங்காயெண்ணை மணத்தின் கூத்தலோ
தனியொரு ஈர்ப்படி ,நவீனம் எம் நலிவடி
விழியோரம் படரும் கருங்காடு கூட
கண்ணுக்கோர் பருவக் கவர்ச்சியடி
மைபூசாத இதழ்கள் செழிப்புச் சுரங்கமடி
மருண்டு திரண்ட அங்கங்கள் நளின
மங்கைதன் இயற்கை அடையாளமடி
எதை நீ சிறப்பென நினைக்கிறாய்?
நவீனத்தை நலமென உணர்கிறாயா?
யார் விதித்தது இயற்கையை மாற்றுமெண்ணம்?
இயம்புகிறேன் கேள் ,
உன் கபடமற்ற அழகுதான் காந்தமடி
.........இப்படிக்கு நான்...
~வன்னியூர் செந்தூரன்~
உனக்கே அருவருப்பாயிருக்கலாம்
உன்தேகம் அம்சவழகாயிருக்கலாம்
அன்றைய படத்தைக்கூட அவமானமாயுணரலாம்
வர்ணப்பூச்சுக்கள் உன்வதனத்தை
வாடகைக் கொள்வனவிட்டிருக்கலாம்
விழிமடலில் ஓவியமிட தூரிகைகள் காத்திருக்கலாம்
உதடுகள் செம்முத்தமிட்டே கண்திறக்கலாம்
வாடகைக் கொள்வனவிட்டிருக்கலாம்
விழிமடலில் ஓவியமிட தூரிகைகள் காத்திருக்கலாம்
உதடுகள் செம்முத்தமிட்டே கண்திறக்கலாம்
கேசங்கள் வெப்பத்தால் பதனிட்டு
கருநீர் வீழ்ச்சியாய் வழிந்தோடலாம்
நறுமணப் பூச்சுகள் உன்னில் கமகமக்கலாம்
நறுமுகையே நீ நாகரீக நங்கை தான்
கருநீர் வீழ்ச்சியாய் வழிந்தோடலாம்
நறுமணப் பூச்சுகள் உன்னில் கமகமக்கலாம்
நறுமுகையே நீ நாகரீக நங்கை தான்
மருதாணி விரலில் இரசாயனம் மின்னலாம்
இடுப்பழகு காக்க போசனம் தவிர்த்திருக்கலாம்
உன் நடை முதல் உடை என்ன எடை கூட
இயல்பு மாற்றம் கண்டு இனிப்பாயிருக்கலாம்
இடுப்பழகு காக்க போசனம் தவிர்த்திருக்கலாம்
உன் நடை முதல் உடை என்ன எடை கூட
இயல்பு மாற்றம் கண்டு இனிப்பாயிருக்கலாம்
ஓ கண்ணே ஒன்றைப் புரிவாயா அழகே
எண்ணை படிந்த முகத்தின் நயம்
எந்த நவீன முகக்களியிலும் வராதடி
தேங்காயெண்ணை மணத்தின் கூத்தலோ
தனியொரு ஈர்ப்படி ,நவீனம் எம் நலிவடி
எண்ணை படிந்த முகத்தின் நயம்
எந்த நவீன முகக்களியிலும் வராதடி
தேங்காயெண்ணை மணத்தின் கூத்தலோ
தனியொரு ஈர்ப்படி ,நவீனம் எம் நலிவடி
விழியோரம் படரும் கருங்காடு கூட
கண்ணுக்கோர் பருவக் கவர்ச்சியடி
மைபூசாத இதழ்கள் செழிப்புச் சுரங்கமடி
மருண்டு திரண்ட அங்கங்கள் நளின
மங்கைதன் இயற்கை அடையாளமடி
கண்ணுக்கோர் பருவக் கவர்ச்சியடி
மைபூசாத இதழ்கள் செழிப்புச் சுரங்கமடி
மருண்டு திரண்ட அங்கங்கள் நளின
மங்கைதன் இயற்கை அடையாளமடி
எதை நீ சிறப்பென நினைக்கிறாய்?
நவீனத்தை நலமென உணர்கிறாயா?
யார் விதித்தது இயற்கையை மாற்றுமெண்ணம்?
இயம்புகிறேன் கேள் ,
உன் கபடமற்ற அழகுதான் காந்தமடி
.........இப்படிக்கு நான்...
நவீனத்தை நலமென உணர்கிறாயா?
யார் விதித்தது இயற்கையை மாற்றுமெண்ணம்?
இயம்புகிறேன் கேள் ,
உன் கபடமற்ற அழகுதான் காந்தமடி
.........இப்படிக்கு நான்...
No comments:
Post a Comment